×

இஸ்ரேலில் சர்ச்சைக்குரிய நீதித்துறை அதிகாரப்பறிப்பு மசோதா வெற்றியால் ஆத்திரம்; ஏராளமானோர் போராட்டம் ,வன்முறை

இஸ்ரேல்: இஸ்ரேலில் லட்சக்கணக்கான மக்களின் கடும் எதிர்பார்ப்பையும் மீறி நீதித்துறையின் அதிகார பறிப்புக்கான மசோதா அந்த நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. ஒரு புறம் நீதித்துறை சீர்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய லட்சக்கணக்கான மக்கள் மறுபுறம் மசோதாவை ஆதரித்து தலிநகர் டெல் அவிவ்யில் கூடிய பல்லாயிரக்கணக்கான அரசு ஆதரவாளர்கள் இவர்களின் போராட்டங்களுக்கு நடுவில் நீதித்துறை சீர்திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்த மசோதா பெருத்த அவமானம் என்ற குரல் எழுப்பி அவையில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் யயர் லோபீச் தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளும் கட்சி எம்.பி.க்கள் 64 பேரும் மசோதாவை ஆதரித்து வாக்களித்ததால் மசோதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து நாடாளுமன்றம் முன்பு கூடிய எதிர்ப்பாளர்கள் ரஸுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது இதில் பலர் காயமடைந்தனர்.

இந்த போராட்டத்தில் ஒரு பகுதியாக தாயும் அவரது மகளான கல்லூரி பேராசிரியர் ஒருவரும் மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். இது பலரது கவனத்தையும் ஈர்த்தது. மறுபுறத்தில் தீவிர வடதுசாரியான பிரதமர் ரேடன்யாவின் அரசுக்கு ஆதரவு தெரிவித்து தலைநகர் டெல் அவிவ்யில் லட்சக்கணக்கான மக்கள் கூடினர். நீதித்துறை சீர்திருத்த மசோதா அவசியம் என்று அவர்கள் முழக்கமிட்டனர்.

இஸ்ரேல் வரலாற்றில் மிக பெரிய மக்கள் போராட்டம் நடப்பதற்கு காரணமான நீதித்துறை சீர்திருத்த மசோதாவானது நீதிபதிகள் நியாயமற்றது என்று கருதும் அரசாங்க முடிவுகளை தடுக்க வகை செய்யும் வாய்ப்பை பறிக்கிறது. இந்த மசோதா இஸ்ரேலின் ஜனநாயக முழுமியங்களை குறைப்பதோடு சர்வாதிகார ஆட்சிக்கான கதவை திறக்கும் என்று எதிர்ப்பாளர்கள் அஞ்சுகின்றனர். எதிர்ப்பாளர்களை 29 வாரங்களாக ஒவ்வொரு சனிக்கிழமையும் போராட வைத்து அந்த நாட்டின் 74 ஆண்டுகால வரலாற்றில் மிக பெரிய போராட்டங்களில் ஒன்றாகவும் இந்த மசோதா மாற்றி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

The post இஸ்ரேலில் சர்ச்சைக்குரிய நீதித்துறை அதிகாரப்பறிப்பு மசோதா வெற்றியால் ஆத்திரம்; ஏராளமானோர் போராட்டம் ,வன்முறை appeared first on Dinakaran.

Tags : Israel ,
× RELATED நீடிக்கும் இஸ்ரேல் – காசா போர்;...